\
dam
damreuters

முடிவுக்கு வரும் பருவமழை! அணைகளில் குறைந்த நீர் இருப்பு! வறட்சியின் பிடியில் இந்தியா?

அணைகளிலும் நீர் இருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 
Summary

இந்தாண்டு பருவமழை குறைவாகப் பெய்ததால், இந்தியா முழுவதும் 178 முக்கிய அணைகளில் நீர் இருப்பு சராசரியை விட குறைந்து 70% மட்டுமே உள்ளது. தென் இந்தியாவில் நிலை மிக மோசமாக, அணைகளில் 50% நீர் மட்டுமே இருப்பதாக CWC தரவுகள் காட்டுகின்றன. எல் நினோ, ஜூன்-ஆகஸ்ட் மாதங்களில் மழை குறைவு ஆகியவை காரணமாக, குடிநீர், விவசாயம், நீர்மின் உற்பத்தி அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

கோடையில் வெயில் வாட்டி வதைத்தாலும், அதற்குப் பிறகு பருவமழை தொடங்கி மக்கள் மனங்களையும் மண்ணையும் மழையால் நனைத்துவிட்டுச் செல்லும்... ஆனால், இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய பிறகும் பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இதற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ மாற்றமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

நதிநீர் பிரச்னை.. மழைப்பொழிவு குறைவு.. என வறட்சியை நோக்கி நகரும் சூழலில், பெரும் நீராதாரமாக இருக்கும் அணைகளையே அரசும் மக்களும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு அந்த அணைகளிலும் நீர் இருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

rainfall
rainfallreuters

மத்திய நீர் ஆணையமான CWC-யின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள 178 முக்கிய அணைகளில், அவற்றின் மொத்த கொள்ளளவில் சுமார் 70 சதவிகிதம் அளவுக்கே தற்போது நீர் இருப்பு உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரியான 76.62 சதவிகிதத்தைவிட குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 79 சதவிகிதமாக இருந்த நீர் இருப்பும், இந்த ஆண்டு மேலும் குறைந்துள்ளது.

இதில் தென் இந்தியாவின் நிலைதான் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், அணைகளின் மொத்த கொள்ளளவில் சுமார் 50 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

dam
112 ஆண்டில் இதுதான் முதல்முறை : இயற்கையில் நிகழ்ந்த அசாதாரண மாற்றம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் !

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தப் பகுதியில் சுமார் 87.25 சதவிகிதம் அளவுக்கு நீர் இருந்த நிலையில், தற்போது அது கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே, தென் இந்தியாவில் பருவமழை இயல்பைவிட 23 சதவிகிதம் குறைவாகப் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள 31 அணைகளில் 73 சதவிகிதம் அளவுக்கும், வட இந்தியாவில் உள்ள 11 அணைகளில் 62 சதவிகிதம் அளவுக்கும் நீர் இருப்பு உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் உள்ள அணைகளில் 84.61 சதவிகிதம் அளவுக்கு நீர் இருப்பு காணப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழையிலும் மழைப்பொழிவு சீராக இல்லாததே நீர் இருப்பு குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

dam
damreuters

ஜூன் மாதத்தில் இயல்பைவிட 35.4 சதவிகிதமும், ஆகஸ்ட் மாதத்தில் 16.3 சதவிகிதமும் மழைப்பொழிவு குறைந்திருந்தது. செப்டம்பர் மாதத்திலும் மழைப்பொழிவு இயல்பைவிட குறைவாகவே இருந்ததாக IMD தரவுகள் காட்டுகின்றன. இதனால், குடிநீர் தேவை மட்டுமின்றி, விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட தேவைகளுக்கும் அணைகளின் நீர் இருப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் நீர் இருப்பு குறைந்திருப்பது அடுத்தடுத்த மாதங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.

பருவமழை செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், இனி அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு இருக்கும்? அடுத்த மழைக்காலம் தொடங்கும் வரை குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்பதே தற்போது எழும் முக்கியக் கேள்வியாக உள்ளது.

dam
திணறடித்த 4000+ வெள்ளி புதையல்.. 131 ஆண்டுகால சாதனை! 1000 ஆண்டு ‘சிஸ்மா’ பின்னணி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com