“நாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம்!” - NDA கூட்டணி கூட்டத்தில் மோடி!

நாடாளுமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்யவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமானது டெல்லியில் நடைப்பெற்று வரும் சூழலில், அக்கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
மோடி
மோடிமுகநூல்

நாடாளுமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்யவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டமானது டெல்லியில் சில மணி நேரங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமித்ஷா, நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார், சிராக் பஸ்வான், அண்ணாமலை, ஓபிஎஸ், பாரிவேந்தர், டிடிவி தினகரன், ஏ சி சண்முகம் போன்ற பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult
NDA | NarendraModi | BJP | LokSabhaEectionsResult

வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 3 ஆவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கவுள்ள சூழலில், நாடாளுமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வது, மத்திய அமைச்சரவையை தேர்வு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி...”

“என்னை தேர்வு செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

வெற்றிக்கு இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் நன்றி. மக்கள் எனக்கு புதிய பொறுப்பு கொடுத்துள்ளார்கள். 2019 ல் எனக்கு கிடைத்த நம்பிக்கை இப்போது கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை அபரிமிதமானது.

“கடந்த 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துல்ல என்டிஏ கூட்டணிதான் வலிமையானது”

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7 ல் எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி வெற்றிகரமாக ஆட்சி அமைப்பது இது முதன்முறையாகும். 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துல்ல என்டிஏ கூட்டணிதான் வலிமையானது. தேசத்தின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் இல்லை, தேசமே முதன்மையானது.

வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ், பால் தாக்கரே ஆகியோர் என் டி ஏ கூட்டணிக்கு வித்திட்டவர்கள். என்டிஏ என்றால் சிறந்த நிர்வாகம் என்று பொருள். அரசு எப்படி நடக்கிறது, எதனால் நடக்கிறது என்பது இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது.

அரசை நடத்துவதற்கு தேவை, ஒருமித்த கருத்துதானே தவிர பெரும்பான்மை அல்ல.
மோடி

மேலும், சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் உதாரணம். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவைவே.

மோடி
சபாநாயகர் பதவி கோரும் கூட்டணி கட்சிகள்... நெருக்கடியில் பாஜக! விட்டுகொடுக்குமா? விட்டுப்பிடிக்குமா?

“தமிழ்நாட்டில் வாக்கு சதவிகிதம் உயர்வு”

மேலும், தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன்மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் செல்வதை தமிழகத்தில் கிடைத்துள்ள வாக்கு காட்டுகிறது.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஒரு புயலாக உருவெடுத்து இருக்கிறார். அடுத்த 25 ஆண்டுகளில் ஒடிசா முன்னேறிய மாநிலமாக மாறும்.

“100 ஆண்டு பழைய சிந்தனையுடன் காங்கிரஸ்”

மின்னணு வாக்கு இயந்திரங்கள் உயிருடன் உள்ளதா இல்லை இறந்துவிட்டதா என்று சிலர் கேட்கின்றனர். அடுத்த தேர்தலும் மின்னணு வாக்கு இயந்திரம் மீது குற்றச்சாட்டு எழும். தேர்தல் நடைமுறை குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், இப்போது மௌனமாகி விட்டனர். வாக்கு இயந்திர விஷயத்தில் காங்கிரஸ் 100 ஆண்டு பழைய சிந்தனையுடன் செயல்படுகிறது.

மோடி
18 வது மக்களவை | எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி?

ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பாஜக சொல்கிறது. ஆனால், ஜனநாயகம் செத்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சிக்கிறது. ஆக, என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைத்துள்ளது சாதாரண வெற்றியல்ல, இமாலய வெற்றி. என்டிஏ கூட்டணிதான் புள்ளி விவரப்பட்டியலில் வலிமையானது.

“நாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம்!”

4 ஆம் தேதிக்கு முன்பு யார் ஆட்சிக்கு வருவார்கள் என சிறுவனிடம் கேட்டால் கூட என்டிஏ என கூறினார். 2014, 2019, 2024 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட பாஜக கூடுதலாக பெற்றுள்ளது. ஆகவே, எப்போதும், நாங்கள் தோற்கவும் இல்லை, தோற்கவும் மாட்டோம்! எனவே, தேசத்தின் முன்னேற்றத்திற்கு நான் இன்னும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என உறுதியேற்றுள்ளேன்.

“NDA என்பது...”

என்டிஏ என்பது புதிய இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா, லட்சியமிக்க இந்தியா . பாஜக கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

ஆனால், ரூ. 1 லட்சம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து மக்களை தவறாக காங்கிரஸ் வழிநடத்தியுள்ளது. பாஜக நடுத்தர மக்களின் சேமிப்பை அதிகரிக்க வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கும்.

“ஜி 20-க்கு பிறகு புதிய நம்பிக்கை, புத்துணர்ச்சி...”

மேலும், ஜி20 மாநாட்டுக்கு பிறகு புதிய நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கிடைத்துள்ளது. கொள்கையும் செயல்பாடும் எங்களின் நோக்கமாக இருக்கும். 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் என்னை நீங்கள் அணுகலாம். 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். மேலும், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த துறைகள் என ஊடகங்களில் இருந்து பல கணிப்புகள் வருகிறது. பிரேக்கிங் செய்திகளை நம்பி இந்த நாடு செயல்படாது” என்று தெரிவித்துள்ளார்.

மோடி
தொடங்கியது NDA ஆலோசனை கூட்டம்! புது முகங்ககளை இறக்கும் பாஜக? பிளான் பண்ணி காய் நகர்த்தும் மோடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com