சாதிவாரி கணக்கெடுப்பு | திட்டமிட்டே தாமதம்.. குற்றஞ்சாட்டும் காங்கிரஸ்!
சாதிவாரிக் கணக்கெடுப்பு திட்டத்தை பிரதமர் மோடி திட்டமிட்டே தாமதப்படுத்துவதாகக் காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்து ஓராண்டு கடந்தும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக, காங்கிரஸை ‘அர்பன் நக்சல்’ ((Urban Naxal)) சிந்தனை கொண்டவர்கள் எனப் பிரதமர் விமர்சித்ததாக ஜெயராம் ரமேஷ் நினைவுகூர்ந்த நிலையில், அதற்காக பிரதமர் காங்கிரசிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.. தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு திட்டத்தை அறிவித்துவிட்டுச் செயல்படுத்தாமல் இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
2025ஆம் ஆண்டு மே 5 அன்று சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

