\
காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: இணைய சேவை முடக்கம்!

காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: இணைய சேவை முடக்கம்!

காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: இணைய சேவை முடக்கம்!
Published on: 

ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்களில் இருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பதற்றம் தொடர்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கானோவோபோரா பகுதியில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, அங்குள்ள நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு கற்கலை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜாவேத் அகமது பட், சுஹைல் ஜாவித் லோன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகளும் இன்றைய தினம் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. பதற்றத்தைத் தணிக்க காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com