உ.பி: மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் மழைநீர் படாமல் சொகுசாக சென்ற ஆசிரியை சஸ்பெண்ட்!

உ.பி: மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் மழைநீர் படாமல் சொகுசாக சென்ற ஆசிரியை சஸ்பெண்ட்!

உ.பி: மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் மழைநீர் படாமல் சொகுசாக சென்ற ஆசிரியை சஸ்பெண்ட்!
Published on

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட அரசுப்பள்ளியில், மாணவர்கள் அமைத்த நாற்காலி பாலத்தில் சொகுசாக நடந்து வந்த ஆசிரியை வீடியோ வைரலானதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் பல்தேவ் கிராம பஞ்சாயத்து தகெட்டாவில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளி கனமழை காரணமாக வெள்ளத்தால் முழுவதுமாக சூழப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி செயல்படத் துவங்கிய நிலையில், மாணவர்கள் தேங்கிய மழைநீரில் நடந்து வகுப்பறையை அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை, மாணவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை கொண்டு அமைத்த பாதை வழியாக நடந்து வகுப்பறைக்குச் சென்றுள்ளார்.

10 வயதைக் கூட எட்டாத மாணவர்கள் நாற்காலிகளை மழைநீரில் நின்றபடி நாற்காலிகளை தாங்கிப் பிடிக்க, ஆசிரியை சொகுசாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரிடம் ஊடகத்தினர் பேச முற்பட்டபோது அவர் பதில் ஏதும் கூற மறுத்து, 'தயவுசெய்து மாணவர்களுக்கு பாடம் நடத்த விடுங்கள்' என்று கூறினார்.

இதையடுத்து ஒய்யாரமாக நடந்து சென்ற அந்த ஆசிரியை பல்லவி ஷ்ரோத்தியாவை கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து பேசிய பள்ளியின் முதல்வர் சுஜாதா சிங், சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஆனால், ஆசிரியைக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டு அசுத்தமான தண்ணீரில் நடக்க முடியாத காரணத்தால் மாணவர்களைக் கொண்டு நாற்காலி பாலம் கட்டப்பட்டதாக பள்ளியின் முதல்வர் சுஜாதா சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com