நாட்டிற்காக இன்னுயிர் நீத்தவர்களை போற்றுவோம்! ஷஹீத் திவாஸ் என்று அழைக்கப்படும் தியாகிகள் தினம்!

நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று. ஜனவரி 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'ஷஹீத் திவாஸ்' என்று அழைக்கப்படும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
காந்தியடிகள்
காந்தியடிகள்PT

நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று. ஜனவரி 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் 'ஷஹீத் திவாஸ்' என்று அழைக்கப்படும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ‘மத நல்லிணக்க நாள்’ என இன்று கடைபிடிக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகள்
காந்தி நினைவு தினம்: மத நல்லிணக்க உறுதிமொழியேற்ற அமைச்சர்கள்

தியாகிகள் தினம் - வரலாறு

இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும், பல தியாகிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி தங்களின் இன்னுயிர்களை நீர்த்துள்ளனர். இவர்களை நினைவுகூறும் வகையில் மகாத்மா இறந்த இந்த நாளை தியாகிகளின் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

அந்த தியாகிகளை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் இன்றைய நாளில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்நாளில் புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு ஆயுதப்படையினரும், உயர் பதவியிலுள்ள அதிகாரிகளும் மலர்வளையம் வைத்து தியாகிகளின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவர்.

காந்தியடிகள்
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகி நிஜாமுதீனின் அறியப்படாத பக்கம்!
கூகுள்
Summary

மேலும் ராஜ்காட் நினைவிடத்தில் உள்ள சமாதியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தியாகிகள் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து மாணவர்களுக்கு நினைவுகூறுவதுடன், அவர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கவும் அறிவுறுத்தப்படும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com