march 18 2025 morning headlines news
headlines imagesx page

Headlines|துளசி கபார்டுக்கு கும்பமேளா தீர்த்தம் வழங்கிய பிரதமர் முதல் பூமிக்கு திரும்பும் சுனிதா வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மராட்டியத்தில் வெடித்த வன்முறை முதல் ஐ.பி.எல் தொடரில் முதல்முறையாக கேப்டனாகும் ரஜத் பட்டிதருக்கு கோலியின் ஆதரவு வரை விவரிக்கிறது.
Published on
  • மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

  • அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்டுக்கு கும்பமேளா தீர்த்த கலசத்தை வழங்கி வாழ்த்தினார் பிரதமர் மோடி.

  • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புடின் இன்று தொலைபேசி மூலம் உரையாட உள்ளார்.

  • 9 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் இன்று காலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்ததில் தடுக்க சென்ற காவல் ஆய்வாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

  • ரயில் பயணிகள் பயன்படுத்தும் தலையணை, போர்வை உறைகளில் தமிழ் உட்பட 3 மொழிகளில் அச்சிட வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்துக்கு ரயில்வே மதுரைக் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.

  • மெக்சிகோவில் துப்பாக்கிச் சூட்டில் 2 சிறார்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • துனிசியா கடற்பரப்பில் தத்தளித்த அகதிகளில் 612 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • கனடா புதிய பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • ஐ.பி.எல் தொடரில் முதல்முறையாக கேப்டனாகும் ரஜத் பட்டிதருக்கு ஆதரவாக விராட் கோலி குரல் கொடுத்துள்ளார்.

  • தனது விளையாட்டு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இகா ஸ்வியாடெக் கவலை தெரிவித்துள்ளார்.

march 18 2025 morning headlines news
”பாபர் மசூதிபோல் ஒளரங்கசீப் கல்லறையையும் அகற்றணும்” மகாராஷ்டிரா அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com