மராத்தா இடஒதுக்கீடு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விடுத்த முக்கிய வேண்டுகோள்!

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் மனோஜ் ஜராங்கே போராட்டத்தை கைவிட வலியுறுத்தி மகாராஷ்டிர அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டேகோப்புப் படம்

மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திவரும் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.க்களும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தலைநகர் மும்பையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இன்று (நவ.1) பங்கேற்றனர். இதில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் மனோஜ் ஜராங்கே போராட்டத்தை கைவிட வலியுறுத்தி மகாராஷ்டிர அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க: தென்னாப்ரிக்க வரலாற்றில் முதல் வீரர்.. புதிய சாதனை படைத்த டி காக்.. அடுத்த டார்கெட் ரோகித், சச்சின்!

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ‘மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம். மராத்தா இடஒதுக்கீடு, சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும், இது தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மராத்தா சமூகத்துக்கு நீதி வழங்குவதற்கு ஏற்ப விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு சிறிது காலம் ஆகும். எனவே, மராத்தா சமூக மக்கள் அமைதி காக்க வேண்டும். மனோஜ் ஜராங்கே அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின்மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் புது வடிவத்தில் சென்றுகொண்டிருக்கிறது. பாதுகாப்பற்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, அனைவரும் அமைதி காக்க வேண்டும், அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: ’வீட்டில் வேலை பார்த்தது போதும்.. இனி ஆபீஸ் வாங்க’ - ஊழியர்களுக்கு புதிய உத்தரவிட்ட இன்ஃபோசிஸ்!

முன்னதாக, தலைநகர் மும்பையில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மராத்தா சமூக மக்கள், ஆளுநர் ரமேஷ் பயாசை சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர். வன்முறையின்போது இரண்டு எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மீது தாக்குதல் நடந்த சூழலில், சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாநிலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பீட், சாம்பாஜி நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே
மராத்தா இடஒதுக்கீடு: பற்றி எரியும் மகாராஷ்டிரா.. MLA, MPக்கள் ராஜினாமா.. ஆளும் அரசுக்கு சிக்கலா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com