\
World-Praised Indian Pilot The Story Behind Smith Machars Name
ஸ்மித் மச்சார்reuters

’FLYDUBAI’ தாக்குதல் சம்பவம்.. உலகமே புகழும் இந்திய கேப்டன்.. ஸ்மித் மச்சாருக்கு ரூ. 1 கோடி பரிசு!!

ஃப்ளைதுபாய் விமான தாக்குதல் சம்பவத்தில், 180-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, மேன் கைண்ட் பார்மா நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதி அறிவித்துள்ளது.
Published on: 

செப்டம்பர் 30, 2026 அன்று துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் கேப்டனும் இந்தியாவைச் சேர்ந்தவருமான ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்த வழி செய்தார். இதையடுத்து, விமானத்தில் இருந்த 174 பயணிகள் உட்பட 182 பேரையும் காப்பாற்றும் வகையில், சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் அவசரமாகப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சாரை பாராட்டி வருகின்றனர்.

fly dubai
fly dubai reuters

மேலும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவச் சிகிச்சையில் பெற்று வருகிறார். அதேவேளையில் ஓமனின் துணை விமானி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைது செய்யப்பட்ட அந்த துணை விமானி, சிரியாவுடனான தொடர்பு மற்றும் தீவிரவாதக் கருத்துகளை கொண்டிருப்பவர் என்ற புதிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது சவூதி அரேபிய பாதுகாப்பு அமைப்புகளின் தீவிரக் காவலில் உள்ளார்.

இந்தச்சூழலில் தான், கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் பார்மா நிறுவனம் ரூ.1 கோடி வெகுமதி அறிவித்துள்ளது. இதுகுறித்து மேன் கைண்ட் பார்மா (Mankind Pharma) நிறுவனத்தின் துணைத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமானராஜீவ் ஜுனேஜா (Rajeev Juneja) வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய தைரியம், அமைதி மற்றும் பொறுப்புணர்வுக்கு எந்தத் தொகையும் ஈடாக முடியாது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையே தனது உயிரை விட மேலாகக் கருதிய அவரது தியாகம் மற்றும் தலைமைத்துவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ₹1 கோடி நிதி வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World-Praised Indian Pilot The Story Behind Smith Machars Name
காதலியைப் பிரிந்த எலான் மஸ்க்! “இனி சிறந்த பெற்றோர்களாக இருப்போம்” உருக்கமாக பதிவிட்ட ஷிவோன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com