நொய்டா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் #ViralVideo

ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அப்பெண்ணின் கன்னத்தில் மாறிமாறி அறைகிறார்.
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம்
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம்NGMPC22 - 147

டெல்லி அருகில் உள்ள நொய்டா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரல் வீடியோவாக வலம் வருகிறது.

டெல்லியை அடுத்துள்ள நொய்டா பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை பலமுறை கன்னத்தில் அடிக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஒரு இளைஞரும், ஒரு பெண்ணும் வளாகத்தில் நின்றுக்கொண்டு பேசுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அப்பெண்ணின் கன்னத்தில் மாறிமாறி அறைகிறார்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவம்
கந்துவட்டி கும்பலின் அடாவடியும்.. பறிபோன உயிர்களும் - நெஞ்சைப் பிழியும் சோகம்!

தாக்குதலிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அப்பெண் கையை உயர்த்தி தடுக்க முற்படுகிறார். ஆனால் இளைஞரின் தாக்குதலிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை.

பிறகு அப்பெண் அருகில் இருக்கும் மேடையில் அமர்கிறார். அப்பொழுது இளைஞர் அந்த இடத்தை விட்டு செல்ல நினைக்கிறார். ஆனால் அவரைத் தொடர்ந்து அப்பெண் செல்கையில் மீண்டும் அந்த இளைஞர் அப்பெண்ணை கன்னத்தில் அறைகிறார். இந்த வீடியோவை யார் எடுத்தது என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வீடியோவை அடிப்படையாகக்கொண்டு போலீசார் நடந்த சம்பவத்தை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் சுதந்திரம், ஆணுக்கு பெண் சரிசமம் என்று பேசி வந்தாலும், ஒரு பொது இடத்தில் அதுவும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு பெண்ணை ஆண் அடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com