திடீரென புயலைக் கிளப்பிய மம்தா பானர்ஜி! பதறிப்போன காங். தலைவர்கள்.. திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மம்தா, ஜெய்ராம் ரமேஷ்
மம்தா, ஜெய்ராம் ரமேஷ்pt web

மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்தாலும், மேற்குவங்கத்தில் மட்டும் தனித்துப் போட்டியிட இருப்பதாக அவர் கூறியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, “INDIA கூட்டணியில் இதுவரை தொகுதிப்பங்கீடு தொடர்பாக யாரிடமும் எதுவும் பேசவில்லை. என்னுடைய ஆரம்ப முன்மொழிவு அவர்களால் நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்தே எங்கள் கட்சி வங்காளத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என்ற முடிவெடுத்தது.

பேரணியில் மம்தா
பேரணியில் மம்தாட்விட்டர்

அவர்கள் இங்கு யாத்திரை நடத்துகிறார்கள். மரியாதை நிமித்தமாக ஒரு முறையாவது சகோதரி நான் உங்கள் மாநிலத்திற்கு வருகிறேன் என எங்களுக்குத் தெரிவித்தீர்களா? வங்காளத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. தேர்தலுக்கு பின்பே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சிந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ள இந்தியா கூட்டணியில் மம்தாவின் இந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு கூட்டம் புறக்கணிப்பு, காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவோம் என மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்ததற்கு மேற்குவங்க காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது. மேலும் அவர்கள் 10 முதல் 12 தொகுதிகளை கேட்டதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், pt desk

மாநில அளவில் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், “திரிணாமூல் காங்கிரஸ் INDIA கூட்டணியின் தூண். மம்தா இல்லாத இந்திய கூட்டணியை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நாளை யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுக்கு வரும். அது அனைவரையும் திருப்திபடுத்தும்.

நீண்ட தூர பயணத்தின்போது சில நேரங்களில் வேகத்தடைகள் வரும். விவாதத்தின் மூலம் அதற்கான வழியை கண்டுபிடிப்போம். மம்தா பானர்ஜியின் முன்னுரிமை என்பது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். அதே நோக்கத்துடன் தான் பாரத் ஜூடோ நியாய யாத்ரா நாளை மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நுழைகிறது” என தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, “அவர் எங்கள் சகோதரி. நாங்கள் அவரை நேசிக்கிறோம் மதிக்கிறோம். கூட்டணி ஒன்றுபட்டே உள்ளது. நாங்கள் இணைந்து போராடுவோம். கூட்டணி கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறு மாதிரி இருக்கும். நாங்கள் தொடர் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com