மொழிப்போர் தொடங்கிய மம்தா பானர்ஜி.. மத்திய அரசு மீது கடுமையான விமர்சனம்!
பிர்பம் (BHIRPUM) மாவட்டம் போல்பூரில் (BOLPUR) நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, உயிரைவிடக் கூட துணிவேன் என்றும் ஆனால் ஒரு போதும் என் மொழியை கைப்பற்ற யாரையும் அனுமதிக்கமாட்டேன் என்றார். வெளிநாட்டில் இருந்து மேற்கு வங்காளத்தில் குடியேறிய வங்கமொழி பேசும் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்த நீக்க மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் முயற்சிப்பதாக மம்தா குற்றஞ்சாட்டினார்.
பாஜக அரசு மொழி பயங்கரவாதத்திற்கு முயற்சி செய்வதாகவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி வங்காளத்தில் தடுப்பு முகாம்கள் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் தகுதி வாய்ந்தவர்களை நீக்க தேர்தல் ஆணையம் முற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இந்தியாவில் எங்கெல்லாம் வங்காள மொழி மக்கள் துன்புறுத்தப் படுகிறார்களோ, அவர்கள் மேற்கு வங்காளத்திற்கு வரலாம் என்றும் மம்தா அறிவுறுத்தினார். மேற்கு வங்காளத்தில் ஒன்றரை கோடி வெளிமாநில தொழிலாளிகள் இருப்பதாகவும் ஆனால் வங்கத்தைச் சேர்ந்த 22 லட்சம் பேரை உங்கள் மாநிலத்தில் வைத்துக்கொள்ள முடியாதா என்றும் மம்தா கேள்வி எழுப்பினார்.