மம்தா பானர்ஜி
Mamata Banerjeeweb

மேற்குவங்கத்தில் ‘வெடிகுண்டுகளை வைக்க பாஜக திட்டம்..' மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

மேற்குவங்கத்தில் வெடிகுண்டுகளை வைத்து அரசியல் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Published on
Summary

மேற்கு வங்க தேர்தலையொட்டி, மாநிலத்தில் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். என்.ஐ.ஏ.அதிகாரிகளை உள்ளே நுழையவைக்க பாஜக முயற்சிப்பதாகவும் பேசியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது வரும் ஏப்ரல் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பார்வையாளர்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்தசூழலில் தான் மத்தியில் ஆளும் பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாம் பாலிடிக்ஸ் செய்ய பாஜக முயற்சிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிweb

இதுகுறித்து தின்ஹதா பகுதியில் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், அதன்மூலம் என்.ஐ.ஏ.அதிகாரிகளை உள்ளே நுழையவைக்க பாஜக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மம்தாவின் இந்த பாம் பாலிடிக்ஸ் குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி
தொகுதி மறுவரையறை| தென் மாநிலங்களுக்கு எத்தனை சீட்? லிஸ்ட்டோடு சொன்ன அமித் ஷா!

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு..

மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மகளிர் இடஒதுக்கீட்டையும் தொகுதி மறுவரையறையையும் இணைப்பது தேசத்தை பிளவுபடுத்துவதற்கான முயற்சி என சாடியுள்ளார்.

தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை

மேற்கு வங்க மாநிலம் மத்தபங்காவில் தேர்தல் பரப்புரையில் பேசிய மம்தா, இவ்விரு அம்சங்களையும் இணைப்பது மூலம் வாக்காளர் பெயர் நீக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் போன்ற சதிகளை அரங்கேற்ற முயற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து இரு அவைகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி
தொகுதி மறுவரையறை| “39 தொகுதிகள் 32ஆக குறையும்போது..” எச்சரிக்கும் பா.சிதம்பரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com