கர்நாடகா | மல்லிகார்ஜுன கார்கே இளைய மகன்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
கர்நாடகாவைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன கார்கே. இவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இவருக்கு இவருக்கு 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரியங் கார்கே, கர்நாடகாவின் சித்தராமையாவின் ஆட்சியில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், இவரது இரண்டாவது மகன் மிலிந்த் கார்கே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, உடல்நலக் குறைவால் மேலும் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிலிந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நேற்று (ஜூலை 27) அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற மிலிந்த், பொது வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தாமல், அதிலிருந்து விலகியே இருந்து வந்தார்.