\
Major danger posed by smokers
Major danger posed by smokersReuters

புகைபிடிப்போரால் பெரும் ஆபத்து: பாதிக்கப்படும் மனைவி, குழந்தைகள்| ஆண்டுக்கு 17 லட்சம் பேர் பலி!

ஒருவர் பிடிக்கும் புகையை சுவாசிப்பதால், புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத அவரின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் கூட பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
Published on: 
Summary

புகைப்பிடிப்பின் விளைவாக ஆண்டுக்கு 17 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் 2023-ல் மட்டும் 3.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். புகைப்பிடிக்கும் நபரின் குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள் உட்பட அனைவரும் ஆபத்தில் உள்ளனர். பொதுவிடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில், 'புகையிலை இல்லாத இந்தியா' என்ற அமைப்பு இணையவழி கருத்தரங்கு ஒன்றுக்கு நடைபெற்றது. இதில், பிரபல சுகாதார நிபுணர்கள் பலர் பங்கேற்று பேசினர். இந்த கூட்டத்தின் பங்கேற்று பேசியவர்களின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நிதி ஆயோக் முன்னாள் உறுப்பினர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைமை இயக்குனர் டாக்டர் வி.எம்.கடோச், மூத்த இதயவியல் மருத்துவ நிபுணர் கே.கே.தல்வார் ஆகியோர் ஒருவர் புகைப்பிடிக்கும்போது அவரோடு இருப்பவருக்கும் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தனர்.

குறிப்பாக கடந்த 1990-ம் ஆண்டு, இந்திய மக்கள்தொகையில் 43 சதவீதம்பேர், அடுத்தவர் புகைப்பிடிக்கும்போது வெளியிடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்பட்டனர் என்றும், தற்போது அந்த எண்ணிக்கை 31 சதவீதமாக குறைந்து விட்டாலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறினர்.

மேலும், அடுத்தவரின் புகைப்பழக்கத்தால், உலக அளவில் ஆண்டுக்கு 17 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும், இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு, 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள் என்றும் கூறினர். எனவே, ‘100 சதவீதம் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட பொது இடங்கள்' என்ற இலக்கை நோக்கி இந்தியா நகர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். புகைப்பிடிக்கும் நபரால் அவரின் நண்பர்கள், குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் ஆபத்து இருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Major danger posed by smokers
வரலாற்றில் இல்லாத பேரிடர் : ஐரோப்பாவை உலுக்கிய இயற்கை.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com