ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் திடீர் மரணம்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் திடீர் மரணம்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் திடீர் மரணம்

மகாராஷ்டிராவில் 67 வயதான முதியவர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் உடற்பயிற்சி கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு 7.30 மணியளவில் பிரகலாத் நிகம் (67) என்பவர் வழக்கமான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரகலாத் நிகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரகலாத் நிகத்தின் இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென உயிரிழந்தத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com