மகாராஷ்ட்ராவில் மராத்தாவுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு !

மகாராஷ்ட்ராவில் மராத்தாவுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு !
மகாராஷ்ட்ராவில் மராத்தாவுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு !

மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநில மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் மராத்தா சமுதாயத்தினர். இந்நிலையில் தங்கள் சமூதாயத்தினருக்கு அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்று அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இட ஒதுக்கீடு காரணமாக தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மற்றும் பழங்குடியின பிரிவினர் உள்ளிட்டோர் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் எனவும் அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமெனவும் கேட்டு மராத்தா சமூதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதைத்தொடர்ந்தே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதற்கான தீ்ர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்த 16 சதவீத இட ஒதுக்கீடானது உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மேலானதாகும். மகாராஷ்டிராவில் தற்போது 52 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் நிலையில், மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீடை சேர்த்து இனி 68 சதவீதமாக இருக்கும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com