மகாராஷ்டிரா: பச்சைக்கொடி காட்டியது தேர்தல் ஆணையம் - அஜித் பவார் வசம் சென்றது தேசியவாத காங்கிரஸ்!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. இதன்காரணமாக, சரத் பவார் ஓர் அணியாகவும் அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அஜித்பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com