பட்னாவிஸ், அஜித்பவார், ஷிண்டேஎக்ஸ் தளம்
இந்தியா
மகாராஷ்டிரா| நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! சர்ஃப்ரைஸ் இருக்குமா? அதிருப்தி உருவாகுமா?
மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்க இருக்கின்றனர்.
மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலவர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இலாகா மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அமைச்சரவை தொடர்பாக, நேற்று இரவு தேவேந்திர பட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் ஆலோசனை நடத்தினர்.
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்எக்ஸ் தளம்
புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 21 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 12 பேரும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 10 பேரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுழற்சி முறையில் தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்பு விழா நாக்பூரில் நடைபெற உள்ளது.
பிரதமர் To ஷாரூக்| பிரமாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழா! முதல்வரானார் ஃபட்னாவிஸ்;துணை முதல்வர்களாக..