மத்தியப் பிரதேசம் | தந்தை, தம்பியை கொலை செய்த சிறுமி.. ஃபிரிட்ஜில் உடல்கள்.. காதலால் நேர்ந்த கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் காதலைத் தட்டிக் கேட்ட தந்தையைக் கொலை செய்த சிறுமி, அதைப் பார்த்த தம்பியையும் கொலை செய்துவிட்டு காதலரோடு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
model image
model imagefreepik

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவர், 19 வயது இளைஞரை காதலித்துள்ளார். இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரிய வரவே, சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி, தந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதற்கு அவரது காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.

model image
model imagefreepik

ஒருகட்டத்தில் தந்தையைத் தீர்த்துக்கட்டியுள்ளார், அச்சிறுமி. இதை அவருடைய தம்பி பார்த்துவிட்டார். இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரையும் தீர்த்துக் கட்டியுள்ளார். பிறகு இருவரின் உடல்களையும் துண்டுதுண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிட்டு காதலருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றிலிருந்து சிறுமி தலைமறைவாகி உள்ளார்.

இதையும் படிக்க: “என் நண்பனை சுட்டுக்கொன்னுட்டீங்களா?” - ரஷ்ய ராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்துசென்ற உயிர் நண்பர்!

model image
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்தாரா 16 வயது சிறுமி?- சென்னையில் பகீர் சம்பவம்

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சிறுமியை காவல் துறையினர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கைது செய்துள்ளனர். அதேநேரத்தில், அவரது காதலர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

model image
model imagefreepik

இந்தச் சம்பவம் குறித்து ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர டோபல், “அந்தச் சிறுமி, ஹரித்வாரில் காணப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த கொலையை செய்ய அவரது காதலன் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், சிறுமி மத்தியப் பிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது காதலனுடன் ஹரித்வாருக்கு வந்ததாகத் தெரிவித்தார். மேலும், இந்தக் கொலைக்குக் காதலரே திட்டமிட்டார் எனக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

model image
உ.பி.: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிய சிறுமி.. ரயில்முன் தள்ளி கொலை செய்ய முயற்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com