\
LPG Cylinder Shortage? Petroleum Minister Clarifies
Hardeep Singh Puri ANI

LPG சிலிண்டர் தட்டுப்பாடா? பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம்!!

நாட்டில் LPG சிலிண்டர் பற்றாக்குறை இல்லை; வதந்திகளை நம்பி தேவைக்கு மீறி முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம்.
Published on

செய்தியாளர் - M.மீரா

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், நாட்டில் LPG-க்கு தட்டுப்பாடு இல்லை என்றும், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

LPG cylinder
LPG cylinder ANI

ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், சர்வதேச சூழ்நிலையால் ஹார்முஸ் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டதை அரசாங்கம் எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார். இதை சமாளிக்க உள்நாட்டு LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு முன்பு நாளொன்றுக்கு சுமார் 34,000 டன் LPG உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 55,000 முதல் 56,000 டன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 1.07 லட்சம் பெட்ரோல் பங்குகளிலும் எரிபொருள் விநியோகத்தில் முழுமையான தட்டுப்பாடு எங்கும் ஏற்படவில்லை என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

LPG Cylinder Shortage? Petroleum Minister Clarifies
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல் : 25 ஆண்டில் 4-வது புயல்.. யாருக்கெல்லாம் பாதிப்பு?

LPG சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படப்போகிறது என்ற தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து சில இடங்களில் மக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வைத்ததாக அவர் குறிப்பிட்டார். இதனால், வழக்கமாக ஒரு நாளில் பயன்படுத்தப்படும் சுமார் 52 லட்சம் LPG சிலிண்டர்களின் எண்ணிக்கை, ஒருகட்டத்தில் 90 லட்சமாக அதிகரித்ததாகவும் பூரி தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தால் மக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி பதுக்கத் தொடங்கினால், உண்மையில் தேவைப்படும் குடும்பங்களுக்கு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், விநியோக முறையில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

LPG
LPG ANI

மேலும், சிலிண்டர் முன்பதிவை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பி தேவைக்கு அதிகமாக முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் பூரி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய நடவடிக்கைகளின் நோக்கம் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுப்பதே என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LPG Cylinder Shortage? Petroleum Minister Clarifies
சினிமா பாணியில் கடத்தல்.. ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது.. சென்னை விமான நிலைத்தில் நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com