30 வயதுக்குள்ளான இளைஞர்களின் வாக்குகளே இவ்ளோ சதவிதம் இருக்கா?- தேர்தல் ஆணையர் அறிவித்த புள்ளி விவரம்

2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தலுக்கான தேதி, இன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்ட்விட்டர்

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18வது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில (ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்) சட்டப் பேரவைகளுக்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல்
தேர்தல்முகநூல்

தேர்தல் தேதி இன்று (மார்ச் 16) இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தற்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து வரும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ”வரும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் குழு முழுமையடைந்துள்ளது. எங்கள் வேலையும் முழுமையடைந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. தேர்தலை, திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான். நாடு முழுவதும் பலகட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளோம். அமைதியான, வன்முறை இல்லாத, மறு தேர்தல் இல்லாத போலி செய்திகள் மீது உடனடி நடவடிக்கை என பல விஷயங்களை இதற்குமுன் நடந்த 11 மாநில தேர்தல்களில் செய்துள்ளோம்.

அமைதியான, வன்முறை இல்லாத, மறு தேர்தக் இல்லாத போலி செய்திகள் மீது உடனடி நடவடிக்கை என பல விஷயங்களை இதற்கு முன் நடந்த 11 மாநில தேர்தல்களில் செய்துள்ளோம்” என்றார்.

தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த வாக்காளர்கள் குறித்த புள்ளி விவரங்களை இனி காணலாம்.

மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள்!

10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள், 55 லட்சம் இ.வி.எம் மிஷின்கள், நான்கு லட்சம் வாகனங்கள் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.

49 புள்ளி 7 கோடி ஆண் வாக்காளர்கள் 47.1 பெண் வாக்காளர்கள் , 1.8 கோடி முதல் முறை வாக்காளர்கள், 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதை கடந்தவர்கள், 48 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

வயது வாரியான தகவல்:

 • ஆண் வாக்களர்கள் 49.7 கோடி

 • பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர்

 • முதல் தடவை வாக்களர்கள் 1.8 கோடி பேர்

 • மாற்றுதிறனாளி வாக்காளர்கள் 88.4 லட்சம்

 • 85 வயதை கடந்தவர்கள் - 82 லட்சத்துக்கும் அதிகமானோர்

 • மூன்றாம் பாலினத்தவர் 48 ஆயிரம் பேர்

 • 18 - 19 வயதுள்ள வாக்காளர்கள் 1.8 கோடி பேர்

 • 20 முதல் 29 வயதான வாக்காளர்கள் 19.74 கோடி பேர்

 • 17+ வயதில் விண்ணப்பித்துள்ளவர்கள் - 13.4 லட்சம் பேர்

ஏற்பாடுகள்:

 • இளைஞர்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட உத்திகளுடன், வன்முறை இல்லாத பண்டிகையான வாக்களிக்கும் சூழலை நோக்கமாகக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்

 • குடிநீர்,கழிப்பறை, குறியீடுகள், வீல் சேர், ஹெல்ப் டெஸ்க், போதுமான விளக்குகள் உள்ளிட்டவை வாக்குசாவடி மைங்களில் இருக்கு.

 • வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அனைத்து வசதிகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையங்களோடு இணைந்து உறுதி செய்தனர்

 • ஹெலிகாப்படர் முதல் யானை வரை அனைத்து வகைகளிலும் வாக்கு சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்

 • நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் 24*7 நடைமுறையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 • 24 மணி நேரமும் குறைந்தபட்சம் ஒரு அதிகாரியாவது கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் இருந்து குறைகளை நிவர்த்தி செய்வார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com