1.17 நிமிடத்தில் உரையை முடித்த கேரள ஆளுநர்!

கேரள சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வெறும் 1.17 நிமிடங்களில் முடித்தது சர்சையாகி உள்ளது.
கேரள சட்டமன்றம்
கேரள சட்டமன்றம்முகநூல்

கேரள மாநிலத்தில் ஆரிப் முகமது கான் ஆளுநராக இருந்து வருகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. கேரளாவை பொறுத்தவரை ஆண்டின் தொடக்க சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அரசு தயாரிக்கும் கொள்கை அறிவிப்பு அறிக்கையை ஆளுநர் படித்து முடிப்பார். பின்னர் சபாநாயகர் மாநில மொழியில் திரும்ப படிப்பார். இன்று காலை சட்டமன்ற கூட்டத்துக்கு 9 மணிக்கு வந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், அவையில் உள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அறிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள கடைசி பத்தியை மட்டும் படித்தார்.

கேரள சட்டமன்றம்
இடைக்கால பட்ஜெட் - அதிகாரிகள், ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பின்னர் அவையில் இருந்து வெளியேறினார். முன்னதாக அவர் தான் அறிக்கையின் கடைசி பத்தியை மட்டுகே படிக்க போவதாக குறிப்பிட்டு வெறும் 1.17 நிமிடங்களில் உரையை முடித்துக்கொண்டார். இது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com