இடைக்கால பட்ஜெட் - அதிகாரிகள், ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இடைக்கால பட்ஜெட் வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாரம்பரிய வழக்கப்படி டெல்லியில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்Twitter

இடைக்கால பட்ஜெட் வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாரம்பரிய வழக்கப்படி டெல்லியில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கும் முன் மத்திய நிதியமைச்சகத்தில் அல்வா சமைப்பது பாரம்பரிய நடைமுறையாகும்.

அதன்படி இந்தாண்டும் அல்வா சமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தயாரான அல்வாவை நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

பட்ஜெட் இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் போது அதிலுள்ள விவரங்கள் வெளியே கசிந்து விடாமல் இருப்பதற்காக அதில் பங்கேற்பவர்கள் தனி அறையில் வைக்கப்படுவார்கள்.

அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மம்தாவின் ஒரே அறிவிப்பால் சூடுபிடிக்கத் தொடங்கிய அரசியல் களம்! யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

வெளியுலக தொடர்பை தற்காலிகமாக துண்டிப்பதற்கு முன்னதாக அல்வா தயார் செய்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வழங்குவது பாரம்பரிய நடைமுறையாகும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com