fdix page
இந்தியா
இந்தியாவிற்கு 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு!
இந்தியாவிற்கு 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு கிடைத்திருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான ஊக்குவிப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு 25 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு கிடைத்திருப்பதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான ஊக்குவிப்பு துறை தெரிவித்துள்ளது.
2000 முதல் 2024ஆம் ஆண்டு வரை இந்தத் தொகை அந்நிய நேரடி முதலீடாக கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் முதலீடு செய்வதை முதலீட்டாளார்கள் பாதுகாப்பாக கருதுகின்றனர்.
இந்நிலையில், மொரிசீயஸ் வழியாக 25 சதவிகித அந்நிய நேரடி முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்ததாக சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.