லடாக் கவுன்சில் தேர்தல்: காங்கிரஸ் - என்.சி கூட்டணி அபார வெற்றி.. கடுமையான தோல்வியைச் சந்தித்த பாஜக!

லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தலில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
con, bjp
con, bjpfile image

கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன. இந்த நிலையில், கார்கில் மாவட்டத்தை பொறுத்த அளவில் தற்போதுள்ள கவுன்சிலின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பெரோஸ் அகமது கான் இந்த கவுன்சிலுக்கு தலைவராக இருந்தார். இதையடுத்து, அங்கு தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிக்க: உ.பி.: ஆசிரியரின் காலை துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்.. சினிமா பாணியில் வசனம் பேசி வீடியோ வெளியீடு!

அதாவது, 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC)-கார்கில் தேர்தல் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். தேர்தலில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தனித்தனியாக போட்டியிட்டன. பாஜக கட்சி வலுவாக இருந்த இடங்களில் மட்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இதனால் பல இடங்களில் மும்முனைப் போட்டி நிலவியது. குறைந்த பட்சம் 73 சதவீத மக்கள் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு முதல் முறையாக வாக்களித்துள்ளனர் - மொத்தமுள்ள 95,388 வாக்காளர்களில், 74,026 பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (அக்.8) எண்ணப்பட்டன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதில், தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. வெறும் 2 இடங்களை பெற்று பாஜ படுதோல்வி அடைந்தது. சுயேட்சை 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. லடாக் யூனியன் பிரதேசமான பிறகு நடந்த முதல் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆயுத வழி.. தேர்தல் பாதை; உலகை உறைய வைத்த ஹமாஸ் இயக்கம் உருவானதன் வரலாற்று பின்னணி என்ன? - முழுவிபரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com