உ.பி.: ஆசிரியரின் காலை துப்பாக்கியால் சுட்ட மாணவர்கள்.. சினிமா பாணியில் வசனம் பேசி வீடியோ வெளியீடு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் காலை 2 மாணவர்கள் சுட்டிருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்freepik

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கந்தௌலி காவல் நிலையப் பகுதியின் மாலுபூர் சந்திப்பு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த ஆசிரியர் பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார். முன்னதாக, அவரிடம் இரண்டு மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அந்த மாணவர்களில் ஒருவர், சக மாணவி ஒருவரிடம் பேசியுள்ளார். இதை அந்த ஆசிரியர் கண்டித்துள்ளார்.

up student arrest
up student arrest

இதனால், கோபப்பட்ட அந்த மாணவர், நடந்த விஷயத்தைத் தன் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், அந்த ஆசிரியரை போனில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து முடிந்து 6 மாதம் ஆகியிருந்த நிலையில், அவர்கள் பயிற்சி முடித்து வெளியேறிவிட்டனர். இருந்தாலும், ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஆத்திரம் இருந்துள்ளது.

இதையும் படிக்க: உ.பி: கமிஷன் கொடுக்காததால் புல்டோசரால் சாலையை பெயர்த்த பாஜக MLA-ன் ஆதரவாளர்கள் - யோகி எடுத்த ஆக்‌ஷன்

இதையடுத்து, அவர்கள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பயிற்சி மையத்துக்குச் சென்று ஆசிரியரை வெளியே அழைத்துள்ளனர். அவர் வெளியே வந்ததும் அதில் ஒரு மாணவர், அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மற்றொருவர் அதை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அதில், ’6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான் 40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச வேண்டும். இன்னும் 39 மீதம் இருக்கிறது’ என சினிமா பாணியில் வசனம் பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள்... இஸ்ரேலைச் சிதைத்த பாலஸ்தீன ஆயுதக்குழு! போர் பதற்றம் அதிகரிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com