கேரளா - குழந்தையின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்புதிய தலைமுறை
இந்தியா
கேரளா: “பிரியாணியும் பொறிச்ச கோழியும் வேணும்” - கோரிக்கை வைத்த சுட்டி; அமைச்சர் சொன்ன அசத்தல் பதில்
கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணியும், பொறித்த கோழியும் வழங்க வேண்டும் என கேட்கும் சிறுவனின் வீடியோ வைரலான நிலையில், அதனை பரிசீலிப்பதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதியளித்துள்ளார்.
கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணியும், பொறித்த கோழியும் வழங்க வேண்டும் என கேட்கும் சிறுவனின் வீடியோ வைரலான நிலையில், அதனை பரிசீலிப்பதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதியளித்துள்ளார்.
கேரளா - குழந்தையின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்
அங்கன் வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டும் என தனது தாயிடம் , சிறுவன் கேட்டது தொடர்பாக வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டிப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்ய, அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் குழந்தை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் எனக்கூறினார். இந்தக் காணொளியும் வைரலாகி வருகிறது.