\
கேரளா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி

கேரளா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி

கேரளா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய படகு போட்டி
Published on

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செம்பங்குளம் பம்பா நதியில் துவங்கியது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு பந்தயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பம்பா நதியில் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த கேரளாவின் புகழ் பெற்ற நேரு கோப்பைக்கான படகு போட்டியை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

இந்த படகு போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. செம்பகுளம்  படகு போட்டியில் வெற்றி பெறும் படகு, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டியில் பங்கேற்பார்கள். இதில் கலந்து கொண்ட கேரளா போலீசாரால் ஓட்டப்பட்ட செம்பங்குளம் படகு முதல் இடத்தை பிடித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com