
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று காலை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு என்ஐஏ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில், களமச்சேரி குண்டு வெடிப்பிற்கு தான் தான் காரணம் என்று கொடக்கரை காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், டொமினிக் மார்டின் தான் குண்டு வைத்தார் என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து குண்டு வைத்தற்கான காணரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டோமினிச் மார்டின் காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு தாம் தான் குண்டு வைத்ததாக வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.