ரோந்து பணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள்; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பனியின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியாகியுள்ளனர்.
4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
4 ராணுவ வீரர்கள் உயிரிழப்புfile image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு உளவுத்துறையினர் மூலம் ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட ராணுவவீரர்கள் ஒரு வேன் மற்றும் ஜீப்பில் ரோந்து சென்றனர். அப்போது "தேரா கி கலி" என்ற இடத்தில் ரோந்து சென்ற போது திடீரென பயங்கரவாதிகள் ராணுவத்தினரைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடி சம்பவத்தில் 4 ராணுவவீரர்கள் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 பேர் ராணுவவீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
உத்தராகண்ட்: புதையுண்ட கிராமத்தை கண்டுபிடிக்க தொல்லியல்துறை தீவிரம்... ராமகங்காவில் மீண்டும் ஆய்வு!

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ராணுவவீரர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

file image
file image

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்குக் கூடுதல் ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காஜியாபாத்: ‘டீ’ கேட்டு தறாத மனைவியை, வாளைக்கொண்டு தலையை கொய்த கணவன்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com