காஜியாபாத்: ‘டீ’ கேட்டு தறாத மனைவியை, வாளைக்கொண்டு தலையை கொய்த கணவன்!

காஜியாபாத் அருகே, தேநீர் தர மறுத்த மனைவியின் தலையை வாளால் சீவி கொன்ற கணவன்
இறந்த சுந்தரி
இறந்த சுந்தரிPT

காஜியாபாத் அருகே, தேநீர் தர மறுத்த மனைவியின் தலையை வாளால் சீவி கொன்ற கணவன்

காஜியாபாத் அருகில் உள்ளாது போஜ்பூர் கிராமம். இங்கு 52 வயதான தரம்வீர் கூலிவேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி சுந்தரி மற்றும் 4 குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த செய்வாய் கிழமை காலையில் சுந்தரி எழுந்து வழக்கம்போல் தேநீர் போட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சற்று தாமதமாக எழுந்த தரம்வீர் மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார். சுந்தரியும் அவரிடம் தேநீர் தயாரிக்க நேரம் ஆகும் என்று கூறிய நிலையில் தரம்வீருக்கும் சுந்தரிக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தரம்வீர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது மனைவியிடம் தேநீர் கேட்டு இருக்கிறார். ஆனாலும் சுந்தரி வேறு வேலையில் இருந்ததால் தேநீர் தயாரிக்க நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மனைவியின் மீது ஆத்திரம் கொண்ட தரம்வீர் கூரான வாளை எடுத்து மனைவியின் கழுத்தை சீவியிருகிறார். சுந்தரி அலறியபடி அதே இடத்தில் கீழே விழுந்து இறந்தும் விட்டார். அலறலைக் கேட்ட அவரது குழந்தைகள் தாயை காப்பாற்ற எண்ணிய சமயத்தில் ஆத்திரம் தீராத தரம்வீர் கையில் வாளுடன் குழந்தைகளை மிரட்ட, குழந்தைகள் பயத்தில் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலிஸ் வரும் வரை சுந்தரியின் அருகில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்த தரம்வீர் பிறகு போலிசாரிடம் சரணடைந்தார். இவரை கைது செய்த போலிசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com