“ஒருவருக்கொருவர் காலை வாரிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்” கரு நாகராஜன்

குரூப் போட்டோ வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதில் இருப்பவர்களே ஒருவருக்கொருவர் காலை வாரிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.. ‘இந்தியா’ கூட்டணி குறித்து கரு நாகராஜன்

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதனையடுத்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணி குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டி அளித்தார். அதன் இணைப்பு செய்தியில் வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com