சிபில் ஸ்கோர், கார்த்தி சிதம்பரம்
சிபில் ஸ்கோர், கார்த்தி சிதம்பரம்pt web

“சிபில் ஸ்கோர் யார் முடிவு பண்றாங்க; எதுவுமே தெரிவதில்லை”- மக்களவையில் கொந்தளித்த கார்த்தி சிதம்பரம்

சிபில் ஸ்கோர் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என நாடாளுமன்றத்தில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சிபில் ஸ்கோர் என்றால் என்ன? கடன் வாங்குவதில் இதன் பங்கு என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்..
Published on

மக்களவையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சு ஒன்று மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வங்கிகளில் லோன் வாங்குவதற்கு மிகவும் அவசியமான சிபில் ஸ்கோர் குறித்துதான் அவர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம் தனது பேச்சின் தொடக்கத்தில், “மனிதர்கள் செயல்களை சித்திரகுப்தன் ஆராய்ந்து எமதர்மனுக்கு ரிப்போர்ட் செய்வது போல, மக்களின் பண பரிவர்த்தனைகளை சிபில் என்ற நிறுவனம் கண்காணித்து வருவதாகவும், ஆனால் அந்த நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

”சாதாரண குடிமக்களில் இருந்து நிதியமைச்சர் வரை யார் கடன் வாங்க வேண்டும் என்றாலும் இந்த சிபில் ஸ்கோர் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை; முறையாக தனிநபரது சிபில் ஸ்கோர் அப்டேட் செய்யப்படவில்லை; இதனால், வங்கிகளில் கடன் வாங்க சாமானிய மக்கள் செல்லும்போது சிரமமாக இருக்கிறது” என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கொந்தளிப்புடன் பேசினார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

மேலும், ”டிரான்ஸ் யூனியன் என்னும் தனியார் நிறுவனம்தான் நம் ஒவ்வொருவரின் கிரெடிட்டையும் மதிப்பிடுகிறது. ஆனால், அவர்கள் எப்படி கணக்கிடுகிறார்கள், சரியாக நம் கிரெடிட்டுகளை அப்டேட் செய்கிறார்களா, அதில் ஏதாவது தவறு நடந்தால் எப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை; நமக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருக்கிறது” எனவும் அவர் கூறினார்.

சிபில் ஸ்கோர், கார்த்தி சிதம்பரம்
பிரதமர் To ஷாரூக்| பிரமாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழா! முதல்வரானார் ஃபட்னாவிஸ்;துணை முதல்வர்களாக..

இந்த சிபில் ஸ்கோர் என்றால் என்ன? கடன் வாங்குவதில் இதன் பங்கு என்ன?

இந்தியாவில் கிரெடிட் அறிக்கைகள் மற்றும் ஸ்கோர்களை வழங்கும் ஏஜென்சிகளில் ஒன்று credit information bureau (india) limited அல்லது CIBIL ஆகும். கிரெடிட் ஸ்கோர் என்பது 300-900க்கு இடைப்பட்ட மதிப்பாகும். இதில் 300 என்பது மிகக் குறைந்த ஸ்கோர் மற்றும் 900 என்பது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்த ஸ்கோர் ஒரு நபரின் "லோன் பெறும் தகுதியை" நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது.

சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர்

ஒரு கடனை வாங்கி அதை முறையாக சரியான நேரத்தில் செலுத்தி வந்தால் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். இது அடுத்த முறை வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன்வாங்க முயற்சிக்கும்போது உதவியாக இருக்கும். சிபில் ஸ்கோர் 750 என இருந்தால் நல்ல ஸ்கோராகக் கருதப்படுகிறது.

நமக்கு கடன் தேவைப்படும் சமயங்களில் வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களிடம் செல்லும்போது நம் கிரெடிட் ஸ்கோரை பார்த்துவிட்டு அவர்கள் கடன் தர முடிவெடுப்பர். இதற்கு முக்கிய காரணம் நம் முந்தைய காலங்களில் கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி இருக்கிறோமா, எந்த வகையான கடனை வாங்கி இருக்கிறோம் , எவ்வளவு வாங்கி இருக்கிறோம் போன்ற விவரங்களை வைத்து நம்பகத்தன்மைக்காக இந்த ஸ்கோர் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை எந்த கடனும் வாங்காமல், முதன்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த ஸ்கோர் இருக்காது. எனவே அவர்களின் சம்பளம், வேலை போன்றவற்றை அடிப்படையாக வைத்து கடன் கொடுக்கப்படும். கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி செக் செய்வதன் மூலமும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிபில் ஸ்கோர், கார்த்தி சிதம்பரம்
இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா..! சாதாரண நீர் குளியல் vs வெந்நீர் குளியல்! எது பெஸ்ட்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com