கர்நாடகா
கர்நாடகாமுகநூல்

கர்நாடகா | விவாகரத்து மனுவை திரும்ப பெறாத மனைவி.. விரக்தியில் கணவன் செய்த செயல்!

கர்நாடகாவில், விவாகரத்து மனுவை வாபஸ் பெற மனைவி மறுத்ததால் கணவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சமீப காலமாக, விவாகரத்து தொடர்பாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், கவலையை தூண்டும் வகையிலும் அமைவதை காண முடிகிறது.. இந்த வகையில், பெங்களூரில் நடந்தேறிய சம்பவம் ஒன்று, பெரும் அதிர்ப்தியையும் , அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.

பெங்களூருவில், குனிகல் பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தற்போது 9 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த மஞ்சுநாத்தின் திருமண வாழ்க்கையில், அடிக்கடி கருத்து வேறுபாடு எழுவதுண்டு.

இப்படி அடிக்கடி வரும் கருத்து வேறுபாடு தொடர் கதையாக மாறாக, இரண்டு ஆண்டுகளாகவே இந்தநிலை தொடர்ந்துள்ளது . இதனால், ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று எண்ணிய இருவரும், நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

பிறகு மனது மாறிய மஞ்சுநாத், எப்படியாவது தனது மனைவியை சமாதானப்படுத்தி, விவாகரத்து மனுவை வாபஸ் பெற வைத்து விடலாம் என்று நினைத்துள்ளார். அதற்காக பலமுறை முயன்றுள்ளார்.

இருப்பினும், வழக்கை வாபஸ் பெறுவதை அவரது மனைவி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால், மனைவியின் வீட்டிற்கு சென்றே சமாதானப்படுத்தலாம் என்று நினைத்த மஞ்சுநாதன், நாகர்பாவிக்கு சென்றுள்ளார்.

கர்நாடகா
Headlines|ரத்து செய்யப்பட்ட டங்ஸ்டன் ஏலம் முதல் ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த 6 காவலர்கள் வரை!

அப்போதும், அவர் சம்மதிக்காததால், தனது மனைவியின் வீட்டின் முன்னே, பெட்ரோல் ஊற்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மஞ்சுநாத்தின் மரணத்திற்கு அவரது மனைவிதான் காரணம் என்று, மஞ்சுநாத்தின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com