Headlines|ரத்து செய்யப்பட்ட டங்ஸ்டன் ஏலம் முதல் ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த 6 காவலர்கள் வரை!
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதனால், பட்டாசு வெடித்து கிராம மக்கள் கொண்டாட்டம்.
அரிட்டாபட்டி மக்கள் போராட்டத்துக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்த புதிய தலைமுறை. நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த கிராம மக்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையைத்தான் உருவாக்கினார்கள். பட்டியலினத்தவர் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக செயல்பட முடியாத நிலை இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.
தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு. தமிழ் நிலப் பரப்பில் இருந்தே இரும்பு காலம் தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிரமடையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை. மாமூல் பிரியாணிக்காக ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த 6 காவலர்களின் செல்போன்கள் பறிமுதல்.
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளாவில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிப்ரவரி முதல் வாரத்தில் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லவிருப்பதாக தகவல்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது உக்ரைன். 100 அடி உயரத்திற்கு மேல் தீப்பிழப்புடன் கரும்புகை வெளியேறியதால் பதற்றம்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை உடனடியாக சந்திக்கத் தயார். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோவதை தடுக்கும் நோக்கத்துடன் தாம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து.
இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றி தொடருமா?. நாளை நடைபெறும் இரண்டாவது இருபது ஓவர் போட்டிக்காக சென்னை வந்தது இந்திய அணி.