களி உருண்டையும் கத்தரிக்காய் சாம்பாரும்.. மாட்டுவண்டி சவாரி செய்து Pre Wedding shoot நடத்திய விவசாயி

விவசாயம் செய்வது போன்று pre wedding shoot நடத்திய விவசாயி ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. களி உருண்ட, கத்திரிக்காய் என்று கலக்கியுள்ள விவசாயின் கதையை பார்க்கலாம்.
pre wedding photoshoot
pre wedding photoshootputhiya thalaimurai

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் கொள்ளேகலா தாலுகாவில் உள்ள ஹோசமலங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி அபிலாஷ். இவர் சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த கிருத்திகாவை மணம் முடிக்க இருக்கிறார்.

pre wedding photoshoot
pre wedding photoshoot

சமீபகாலமாக நீர்வீழ்ச்சி, பாலம், ஆறு, புராதனச் சின்னங்கள் முன்பு ஆளில்லா விமானம் மூலம் pre wedding shoot ஐ பெரும்பாலானோர் நடத்துகிறார்கள். இந்நிலையில், இளம் விவசாயி அபிலாஷ், வித்தியாசமாக விவசாய நிலத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

pre wedding photoshoot
மாநகரம் to லியோ: ரஜினி வாய்ப்பு தர இதுதான் காரணம்! லோகேஷ் கனகராஜ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

ஏர் உழுதல், களி, கத்திரிக்காய் சாம்பாருடன் மதிய சாப்பாடு, தனது காதல் மனைவியுடனான மாட்டு வண்டி சவாரி என்று pre wedding shoot மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் இளம் விவசாயி அபிலாஷ். இத்தோடு, தன் திருமண நாளில் விவசாயம் குறித்த சொற்பொழிவு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

pre wedding photoshoot
pre wedding photoshoot

இப்போதெல்லாம், விவசாயியை திருமணம் செய்துகொள்ள பலரும் மறுக்கின்றனர் என்ற பேச்சு எழுந்து வரும் சூழலில், அபிலாஷ் என்ற இந்த இளம் விவசாயி, தன் திருமண அழைப்பையே விவசாயம் சார்ந்து வைத்துள்ளார். இவரது வித்தியாசமான முயற்சி பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், pre wedding shoot வீடியோவும் வைரலாகியுள்ளது.

pre wedding photoshoot
“குழந்தையை பார்க்க சென்ற போது செவிலியர் செருப்பால் அடித்தார்”- போலீசில் பரபரப்பு புகார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com