கர்நாடக தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக! முதல்வர் பசவராஜ் எங்கு போட்டி?

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 189 வேட்பாளர்களை கொண்ட முதல்கட்ட பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
பாஜக
பாஜககூகுள்

224 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (மே) 10ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 166 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெளியிட்டு அங்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு இருக்கிறது. அதேநேரம் பாஜகவோ வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து பாஜகவும் இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக
பாஜகfile image

அதன்படி, 189 வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 52 பேர் புதிய முகங்கள் என பாரதி ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 32 பேர் ஓ.பி.சி. பிரிவை சார்ந்தவர்கள் என்றும், 30 பேர் எஸ்.சி. பிரிவையும், 16 பேர் எஸ்‌.டி. பிரிவையும் சார்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 8 பேர் பெண் வேட்பாளர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் 9 மருத்துவர்களுக்கும் 3 கல்வியாளர்களுக்கும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக பாஜக தலைமை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னால் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியிலும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியிலும் போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com