Accident
Accidentpt desk

கர்நாடகா | விநாயகர் சதுர்த்தி விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்து - 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் பெங்களுர் ஜெபி நகர் பகுதியை சேர்ந்த சிந்து ,யோகேஷ், நாகராஜ் குடும்பத்தினர், தும்கூரு மாவட்டம் பாவகடா தாலுகா யத்தினஹாலா கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முடித்துவிட்டு நள்ளிரவில் பெங்களுாருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்

Hospital
Hospitalpt desk

அப்போது, அவர்கள் சென்ற கார் கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கெரகலபாளையா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், மற்றொரு காரில் இருந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

Accident
தேனி | விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்து! 3 சிறுவர்கள் பரிதாப மரணம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுகிரி போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com