\
போடி
போடி புதிய தலைமுறை

தேனி | விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்து! 3 சிறுவர்கள் பரிதாப மரணம்

போடி அருகே விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பிய போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
Published on

போடி அருகே விநாயகர் சிலையை கரைத்து ஊர் திரும்பிய போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், தேவாரம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள டிராக்டர்கள், லோடு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்றனர். அதன்படி, மறவபட்டி கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் மார்க்கையன்கோட்டையில் உள்ள ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு டிராக்டரில் திரும்பியுள்ளனர்.

போடி
காயல்பட்டினம்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - இந்து மக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

அப்போது, லட்சுமிநாயக்கன்பட்டி பகுதியில் டிராக்டர் திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிஷாந்த், கிஷோர், நிவாஸ் ஆகிய 3 சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

நிஷாந்த், கிஷோர், நிவாஸ்
நிஷாந்த், கிஷோர், நிவாஸ்

மற்ற இருவரும் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தேவாரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com