HEADLINES|ஸ்ரீகாந்த் ஜாமின் கோரிய வழக்கு முதல் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் சரிவு வரை!
அத்தியாவசிய கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டங்களில் பிரதமர் பங்கேற்காதது வெட்கக்கேடானது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் குற்றச்சாட்டு.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி முறைகேடு புகார் எதிரொலி. மண்டல தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.
நாட்டிற்கு நல்லது செய்யும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் என்ன தவறு? முதல்வருக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி.
அஜித்குமார் கொலை விவகாரத்தில், நாதக சார்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு.
நீதிமன்றத்தை விளையாட்டு மேடையாக கருத வேண்டாம் என நீதிபதி கண்டனம்.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய வழக்கு. விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு. தனியார் நிறுவன கட்டுமான பணி காரணமா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சூனியம் செய்வதாகக் கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை. பீஹார் மாநிலம் பூர்னியாவில் அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி!
எரிமலை வெடித்து 18 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்த சாம்பல் மேகம். இந்தோனேஷியாவில் நடைபெற்ற சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வைரல்.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 8 சதவிகிதம் சரிவு. புதிய அரசியல் கட்சியை தொடங்குவதுதான் முக்கிய காரணம் எனத் தகவல்.
உலக சாதனை வாய்ப்பை வலிய தவற விட்ட தென்னாப்ரிக்க கேப்டன் முல்டர். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 367 ரன் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்து ஆச்சரியம்.