Headlines: பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி முதல் இன்று தொடங்கும் 4வது டெஸ்ட் வரை!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
199 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அன்புமணி ஆதரவாளர்களான பாமக நிர்வாகி பாலு மற்றும் 3 எம்எல்ஏக்களை உட்கட்சி விசாரணைக்கு ஆஜராகுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து OTP இல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளலாம் என கட்சியினருக்கு திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்ற நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.