\
Ravi Kumar Diwakar
Ravi Kumar DiwakarRavi Kumar Diwakar x

6 மாதங்களில் 36 பேருக்கு தூ*கு! சர்ச்சையில் சிக்கிய நீதிபதி! அரசு எடுத்த அதிரடி முடிவு!

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 36 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
Published on: 
Summary

இந்தியாவில் மரண தண்டனை என்பது சாதாரணமாக வழங்கப்படும் தண்டனை அல்ல. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மிகவும் விதிவிலக்கான ‘rarest of rare’ வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு நீதிபதி 6 மாதங்களில் 36 பேருக்கு மரண தண்டனை கொடுத்து சர்ச்சைக்குரிய வகையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருபவர் ரவி குமார் திவாகர். இவர் நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதகால கட்டத்தில் மட்டும், முசாஃபர்நகரில் 11 வெவ்வேறு வழக்குகளில் 23 பேருக்கும், பரேலியில் 13 வழக்குகளுக்கும் மரண தண்டனை விதித்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார். 4 மாதத்திற்கு முன்பு 4 மாதத்தில் 22 பேருக்கு தூக்குதண்டனை விதித்து பேசுபொருளான ரவிகுமார், மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற கணவனுக்கு மரண தண்டனை விதித்து எண்ணிக்கையை 23ஆக உயர்த்தினார். பின்னர் அடுத்தடுத்த பல்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது அதிகளவில் பேசப்பட்டது.

22 death sentences in just four months
Ravi Kumar DiwakarRavi Kumar Diwakar x

வழக்கின் தன்மையை பொறுத்து மரணதண்டனை விதிக்கும் ரவிகுமார், குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்கும் வகையில் வழக்குகளை திரும்பப்பெருவதையும் கடினமாக்கி உள்ளார். அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான காரணங்களும், பதிவுசெய்யப்பட்ட காரணங்களும் இருந்தால் மரண தண்டனை என்பதை அவர் உறுதிப்படுத்துவதை பாதுகாக்கிறார்.

இந்தசூழலில் தான் இது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அரசு அவரை குடும்ப நீதிமன்றத்திற்கு இடம்மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. நீதித்துறை இடமாற்ற உத்தரவின்படி விரைவு நீதிமன்றத்திலிருந்து குடும்ப நீதிமன்றத்திற்கு ரவிகுமார் மாற்றப்பட்டுள்ளார். அவர் இனி முசாஃபர்நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் பொறுப்பேற்பார் என தெரிகிறது.

சமூக வலைதளங்களில் இவரின் அணுகுமுறைக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் பதிவுசெய்து வருகின்றனர்.

Ravi Kumar Diwakar
’பாத்திரம் கழுவியது முதல் பத்ம ஸ்ரீ வரை..’ உத்வேகத்தின் மறுஉருவம்! யார் இந்த செஃப் தாமு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com