Join BJP after quitting AAP Rajya Sabha MPs
Raghav Chadha, Ashok Mittal, Sandeep Pathak join BJP.x page

பாஜக போட்ட மாஸ்டர் ப்ளான்? ஆம் ஆத்மி கூடாரம் காலி.. அதிர்ச்சியில் கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் ராகவ் சதா மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ராகவ் சதா இன்று அக்கட்சியில் இருந்து விலகியதுடன் பாஜகவில் இணைந்தார். அவருடன், இதர எம்பிக்களான அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரும் டெல்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர். இது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ராகவ் சத்தா - கெஜ்ரிவால் இடையே வெடித்த மோதல்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். இதை ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இதில் அவரது கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பியான ராகவ் சதா பங்கேற்கவில்லை. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும், கட்சித் தலைமைக்கும் (அரவிந்த் கெஜ்ரிவால்) இடையிலான உறவில் சமீபகாலமாகப் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்எக்ஸ் தளம்

மேலும், ஆம் ஆத்மி மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்தும் ராகவ் சதா நீக்கப்பட்டார். இது கட்சிக்குள் அவருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே இருந்த மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. சில காலமாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சதாவின் பதவி பறிக்கப்பட்டது அதை உறுதி செய்தது.

Join BJP after quitting AAP Rajya Sabha MPs
பஞ்சாப் | தலைவருடன் சந்திப்பு.. ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற ஆம் ஆத்மி MLA

பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் தண்டா, “கடந்த சில ஆண்டாகவே நீங்கள் மோடிக்கு எதிராகப் பேச அச்சப்படுகிறீர்கள். நாட்டின் உண்மையான பிரச்னைகளை எழுப்ப அஞ்சுகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், ராகவ் சதா இன்று அக்கட்சியில் இருந்து விலகியதுடன் பாஜகவில் இணைந்தார். அவருடன், இதர எம்பிக்களான அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரும் டெல்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

விலகல் குறித்த கருத்து தெரிவித்த ராகவ் சதா, "எனது ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி 15 ஆண்டுகளாக வளர்த்த கட்சி, இன்று அதன் கொள்கைகளிலிருந்து விலகிவிட்டது. இது இப்போது நாட்டுக்காக உழைக்கவில்லை, சுயநலத்திற்காகச் செயல்படுகிற, கடந்த சில ஆண்டுகளாகவே, நான் ஒரு தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதன் என்பதை உணர்ந்தேன். எனவே, இன்று ஆம் ஆத்மியிடமிருந்து விலகி, மக்கள் பக்கம் (பாஜக) செல்லத் தீர்மானித்துள்ளேன்" என்றார்.

Join BJP after quitting AAP Rajya Sabha MPs
அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு | ”சிபிஐ வாதங்கள் கற்பனையானவை” - நீதிமன்றம் கண்டனம்.!

ஆம் ஆத்மியின் கூடாரமே காலி!

தேசியளவில் பெரிய கட்சியாக உருவெடுக்க முயலும் ஆம் ஆத்மி கட்சிக்கு, அதன் முகமாக அறியப்பட்ட ராகவ் சதா வெளியேறி இருப்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் ராகவ் சத்தா மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவ் சத்தா
ராகவ் சத்தா

ராகவ் சதா, அசோக் மிட்டல், சந்தீப் பதக்.... இவர்களைத் தவிர ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களாக அறியப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பதக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா மற்றும் விக்ரம் சாஹ்னி உள்ளிட்ட 4 எம்பிக்களும் கட்சியில் இணைந்தனர். இதனால் அக்கட்சிக்கு, மாநிலங்களவையில் மூன்று எம்.பி.க்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். ஆம் ஆத்மி கூடாரம் கலைக்கப்பட்டதில் பாஜகவின் பங்கு இருப்பதாக அந்தக் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Join BJP after quitting AAP Rajya Sabha MPs
எம்பியாகும் அரவிந்த் கெஜ்ரிவால்.. தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com