jee main exam 12 questions dropped due to errors
chennai iitx page

ஜேஇஇ நுழைவுத் தேர்வு |வினாத்தாள்களில் அதிகரிக்கும் தவறுகள்.. கல்வித்துறையினர் அதிருப்தி!

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் 12 கேள்விகள் தவறாக இடம்பெற்றதும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாவதும் தேசிய தேர்வு முகமை மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
Published on

ஐஐடி உள்ளிட்ட உயர் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ(JEE) எனப்படும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் அண்மையில் நடந்த ஜேஇஇ மெயின் தேர்வில் 12 கேள்விகள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டு பதில்கள் அடங்கிய தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மொத்தமே 75 கேள்விகள்தான் இருந்த நிலையில் அதில் 12 தவறாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பகுதிகயில் இருந்து கூட கேள்விகள் இடம் பெற்றுள்ளது மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

jee main exam 12 questions dropped due to errors
சென்னை ஐஐடிபுதியதலைமுறை

கடந்த 4 ஆண்டுகளாகவே தவறான கேள்விகள் இடம் பெறுவது வழக்கமாக உள்ள நிலையில் அது தற்போது ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது. மேலும் ஆன்சர் கீ எனப்படும் பதில்கள் தொகுப்பில் மொழிபெயர்ப்புகள் தவறாக இருப்பதாகவும் கல்வித்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

jee main exam 12 questions dropped due to errors
ஜேஇஇ முதன்மை தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு - 56 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று அசத்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com