ஜேஇஇ முதன்மை தேர்வு 2024 முடிவுகள் வெளியீடு - 56 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று அசத்தல்!

நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
JEE தேர்வு முடிவுகள்
JEE தேர்வு முடிவுகள்PT

நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைத்தேர்வு முடிவுகளில் தெலங்கனாவை சேர்ந்த மாணவர்கள் முன்னிலை வகித்தனர்.

நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என் ஐ டி ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. 56 மாணவர்கள் 100/100 பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 15 மாணவர்கள் ஆந்திர மாநிலத்தில் 7 பேர் உட்பட் 56 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். JEE இரண்டு கட்ட தேர்வாக நடத்தப்படுகிறது. இது இரண்டாம் கட்ட தேர்வு முடிவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com