தங்கம் விலை
தங்கம் விலைமுகநூல்

மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
Published on

இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் திருமணம், சீர்வரிசை என கட்டாயத் தேவைக்கு தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள மக்கள், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தொடர் உயர்வில் இன்றைய நிலவரப்படி (ஜனவரி 29 ஆம் தேதி காலை) சென்னையில், தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ. 60,760 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 85 உயர்ந்து ரூ.7,595 ஆக விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,275க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.50,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
கோவை: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சந்தேக மரணம் - 4 பேர் பணியிடை நீக்கம்

ஆனால், வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமுமில்லை. கிராம் வெள்ளி ரூ. 104 ஆக விற்பனையாகிறது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ. 60,000 என்ற விலையைத் தாண்டியது. இந்தவகையில், தற்போது ரூ. 61,000-ஐ நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com