Headlines: வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ முதல் இந்தியா மீது குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் வரை!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட். விண்ணுக்கு நூறாவது ராக்கெட்டை செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது இஸ்ரோ.
துப்பாக்கிச்சூடு நடத்தி காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை. பிப்ரவரி 10ஆம் தேதி வரை மீனவர்களை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
இந்திய மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம். வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என வலியுறுத்தல்.
திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்திகள் இங்கு தலைதூக்க முடிவதில்லை என்றும், போலிகள், துரோகிகள் துணைகொண்டு எதிரிகள் பலமுனை தாக்குதல் நடத்தி சோர்ந்து போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி கிராம மக்கள். டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என இபிஎஸ் பேச்சு.
சிற்றுந்துகளுக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு. முதல் 4 கிலோ மீட்டர் வரை நான்கு ரூபாய் கட்டணமாக நிர்ணயம்.
வேங்கைவயலில் நான்காவது நாளாக கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் போராட்டம். கிராம இளைஞர்கள் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்கு கண்டனம்.
இருவருக்குள்ளே ஏற்பட்ட தனி மனித பிரச்சினையே வேங்கைவயல் விவகாரத்துக்கு காரணம் என தமிழக அரசு விளக்கம். குரல் மாதிரி, வீடியோக்கள் அறிவியல் பூர்வமாக சோதிக்கப்பட்ட பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பதில்.
உத்தராகண்டில் 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுத்து வருவதாக பேச்சு.
அமாவாசையையொட்டி பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு படையெடுத்த பக்தர்கள். கடந்த 16 நாட்களில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக தகவல்...
வரும் 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம். நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு.
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் புதிய வரைவு அறிக்கை தயார். 655 பக்கங்கள் கொண்ட அறிக்கை குறித்து இன்று மீண்டும் விவாதம்.
வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா குற்றச்சாட்டு. 655 பக்கங்களை ஒரே நாள் இரவில் படித்து எப்படி கருத்து சொல்ல முடியும் என்றும் கேள்வி.
அமெரிக்காவுக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீங்கிழைப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு. தீங்கிழைக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை.
சீன புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற வசந்தகால திருவிழா கொண்டாட்டம். பாரம்பரிய நடனம், தற்காப்புக் கலைகளை அரங்கேற்றி அசத்திய கலைஞர்கள்..
ஸ்காட்லாந்தில் தீப்பந்தங்களுடன் கொண்டாடப்பட்ட பாரம்பரிய திருவிழா. மரப்படகை தீயிட்டு கொளுத்தி நடத்தப்பட்ட விநோதம்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி.
2024ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய நிலையில் கவுரவம்.