பவன் கல்யாணை எதிர்த்து ஜெகனின் பவர்ஃபுல் வியூகம்... அனல் தகிக்கும் ஆந்திர அரசியல் களம்!

ஆந்திராவில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடும் பவன் கல்யாணை கண்டிப்பாக வீழ்த்தியே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
பவன் கல்யாண் - வங்கா கீதா
பவன் கல்யாண் - வங்கா கீதாfile image

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை எதிர்த்து காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினரான வங்கா கீதா விஸ்வநாத்தை ஜெகன் மோகன் ரெட்டி வேட்பாளராகக் களமிறக்கியிருக்கும் நிலையில், பவன் கல்யாண் போட்டியிடும் பிதாபுரம் தொகுதி பரபரப்பு நிறைந்த தொகுதியாக மாறியுள்ளது.

பிதாபுரம் தொகுதி நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக பவன் கல்யாணின் அரசியல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

அரசியலில் பவன் கல்யாண்...

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவின் தம்பிதான் பவன் கல்யாண். சிரஞ்சீவியைப் போலவே பவன் கல்யாணுக்கும் மிகப்பெரிய ரசிகப் பட்டாளம் உண்டு. அரசியல் என்று பார்த்தால், 2008-ம் ஆண்டு சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கியபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார் பவன் கல்யாண். அந்தக் கட்சியின் இளைஞர் அமைப்பான யுவராஜ்ஜியத்தின் தலைவராகவும் இருந்தார், அந்தக் கட்சி 2009 தேர்தலில் போட்டியிட்டபோது பவன் கல்யாண் போட்டியிடவில்லை.

பின்னர், சிரஞ்சீவி காங்கிரஸில் கட்சியை இணைத்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் கல்யாண். 2014-ம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியைத் தொடங்கினார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்தார் பவன் கல்யாண். 2018-ம் ஆண்டு தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண் - வங்கா கீதா
அதிமுக - பாமக கூட்டணி உறுதி; ராமதாஸை சந்திக்கும் அதிமுக தொகுதிப் பங்கீட்டுக்குழு!

தொடர்ந்து, 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து 140 தொகுதிகளில் போட்டியிட்டது ஜனசேனா. பவன் கல்யாண், கஜுவாகா மற்றும் பீமாவரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே தோல்வியுற்றார்.

ஜனசேனா
ஜனசேனா

ஜனசேனா அவரின் கட்சி 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இருந்தபோதும் பவனுக்குக் கிடைத்த ஆதரவு அவர் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்குக் கூடிய கூட்டத்தை ஒப்பிடும்போது அது மிகுந்த ஏமாற்றம்தான். தொடர்ந்து 2020-ல் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பவன், கடந்த அக்டோபர் மாதம் அதிலிருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

பிதாபுரத்தில் பவன் கல்யாண்...

ஆனால் பாஜக தெலுங்குதேசம், ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனசேனாவுக்கு இரண்டு நாடாளுமன்ற இடங்களும் 21 சட்டமன்ற இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் பவன் கல்யாண்.

பவன் கல்யாணின் இந்த அறிவிப்பு வந்ததற்கும் அடுத்த நாளே பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் பிதாபுரத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், அது ஷார்ட் பிலிம் தொடர்பான அறிவிப்பென்றும், தான் தேர்தல் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் தந்துவிட்டார். பொதுவாகவே பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்து வருபவர் இயக்குநர் ராம் கோபல் வர்மா. அவரின் வியூகம் திரைப்படத்திலும்கூட பவன் கல்யாணைக் கேலி செய்யும் விதமாக பல காட்சிகளை அமைத்திருக்கிறார். இந்தநிலையில்,அரசியல் களத்திலும் பவனுக்கு எதிராக களமிறங்குகிறார் என்றதும் பரபரப்புக் கிளம்பியது. ஆனால், அதை மறுத்திருக்கிறார்.

அதேவேளை, இந்தத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடுவை குப்பம் தொகுதியிலும், ஜனசேனாவின் பவன் கல்யாணை பிதாபுரம் தொகுதியிலும் கண்டிப்பாக வீழ்த்தியே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

அந்தவகையில் பவன் கல்யாணுக்கு எதிராக காப்பு சமூகத்தின் செல்வாக்குமிக்க தலைவரும் காக்கிநாடா நாடாளுமன்ற உறுப்பினருமான வங்கா கீதா விஸ்வநாத்தை களமிறக்கியிருக்கிறார்.

யார் இந்த வங்கா கீதா?

இவர், 2009-2014 காலகட்டத்தில் இதே தொகுதியில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தவர்.

வங்கா கீதா
வங்கா கீதா

அதேபோல 2000-2006 இல் தெலுங்குதேசம் கட்சியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும், 2019-14 காக்கிநாடா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். பவன் கல்யாணும் இவரும் ஒரே சமூகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தமுறை இந்தத் தொகுதியில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டோராபாபு என்பவர் வெற்றி பெற்றார். அதேவேளை, ஜனசேனாவின் சார்பில் போட்டியிட்ட மகினேடு சேஷு குமாரி 28,000 வாக்குகள் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணை எதிர்த்து கீதா ஒருபுறம், ராம்கோபால் வர்மாவின் டிவிட் மறுபுறம் என பிதாபுரம் தொகுதியில் இப்போதே உட்சபட்ச அரசியல் அனல் தகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com