“ஆதித்யா எல்1 ஏவப்பட்ட நாளில்தான் புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது”-இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஷாக் தகவல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரான சோம்நாத் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சோம்நாத்
சோம்நாத்pt web

இஸ்ரோ தலைவரான கே சிவனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு அடுத்தபடியாக சோம்நாத் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 கடந்த செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது. நான்கு மாதங்கள் பயணம் செய்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி எல்1 புள்ளியில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மலையாளத்தில் டார்க் மீடியா ஹவுஸ்க்கு பேட்டியில் பேசிய சோம்நாத், “சந்திரயான் 3ன் மிஷன் ஏவுதலின் போது சில உடல்நலப்பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் அதைப்பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆதித்யா எல் 1 விண்ணில் ஏவப்பட்ட நாளன்று காலை ஸ்கேன் செய்தேன். அப்போது வயிற்றில் கட்டி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த செய்தி குடும்பத்தினர், சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உடனடியாக தெரிவித்துவிட்டதாக சோம்நாத் தெரிவித்துள்ளார். இதன்பின்பே அச்சத்தைப் போக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீண்டும் பரிசோதனை செய்தநிலையில், அது புற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் ஐந்தாவது நாளில் இருந்து வலியின்றி தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

முதல் 2-3 நாட்களில் அடுத்தடுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆதித்யா எல் 1 ஐத் தொடர்ந்து, நான் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்த பின் கீமோதெரபியும் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் நான் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வேன். ஆனால் நான் இப்போது முழுமையாக குணமடைந்துவிட்டேன். மீண்டும் நான் எனது வேலைகளை தொடங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com